Thursday, 27 June 2013

Thanjavur Temple


History of Thanjavur: The districts of Thanjavur, Kumbhakonam and Nagappattinam (constituting the erstwhile Thanjauvr district) boast of hundreds of ancient temples. The History of Thanjavur: The districts of Thanjavur, Kumbhakonam and Nagappattinam (constituting the erstwhile Thanjauvr district) boast of hundreds of ancient temples. The town of Thanjavur was the seat of the glorious Chola Empire of Tamilnadu, and was later on the seat of the Nayaks and the Marathas. True to art historian Fergusson, the Chola artists conceived like giants and finished like jewellers.


History Of Raja Raja Chola I: Raja Raja Chola I, was clearly the greatest of the Chola Monarchs. During his reign (985 - 1014 AD) he brought stability to the Chola Kingdom, and restored from obscurity the brilliant Tevaram hymns of the Saivite Nayanmars from obscurity. Raja Raja was a great builder, and the Peruvudaiyar Koyil or the Big Tmeple at Thanjavur was his creation. His son Rajendra Chola (1014 - 1044 AD) was a greater conqueror who marched all the way to the banks of the Ganges. This march was commemorated with a new capital Gangaikonda Cholapuram and another 'Periya Koyil'. Gangai Konda Cholapuram was the capital of the Cholas for about two centuries, although it is nothing more than a village now with this rather well maintained magnificient temple. 35 Kilometers from Thanjavur lies Darasuram, once known as Rajarajapuram - a part of the Chola's secondary capital of Pazhaiyarai. Here is the Airavateeswarar Temple built by Raja Raja II (1146 - 1173). It was during the reign of Kulottunga III that the Kambahareswarar temple at Tribhuvanam was built.

These four temples under discussion stand out from the others in Tamilnadu in that, it is only in these that the Vimanam towers over the entrance Gopurams. After these four temples, the Cholas went back to their traditional style of building temples with larger Gopurams and smaller central Vimanams. These temples are fitting memorials to the glory of the rulers that built them, as well as monuments of piety and a committment to art and architecture.

Brihadeeswarar Temple :A 107 paragraph long inscription on the walls of the Vimanam records the contributions of Raja Raja Chola and his sister Kundavai to the Thanjavur temple. The temple stands within a fort, whose walls are later additions built in the 16th century. The towering vimanam is about 200 feet in height and is referred to as Dakshina Meru. The octogonal Shikharam rests on a single block of granite weighing 81 tons. It is believed that this block was carried up a specially built ramp built from a site 6 kilometeres away from here. Huge Nandis dot the corners of the Shikharam, and the Kalasam on top by itself is about 3.8 meteres in height. Hundreds of stucco figures bejewel the Vimanam, although it is possible that some of these may have been added on during the Maratha period. The Shivalingam - Peruvudaiyar, Rajarajeswaramudaiyar - is a huge one, set in a two storeyed sanctum, and the walls surrounding the sanctum delight visitors as a storehouse of murals and sculpture.


 




ஏகாம்பரேஸ்வரர் கோவில்





ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
 
மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.
 மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது. 


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.
 
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.
 
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. 

Thiruvaanaikkaal Jambulingeshwar





திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம். 

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது. 

இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.  

ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.  மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  
இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.  25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. 
மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம். 
இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது. 


அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.
 முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார். 
இங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது. 

பின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.
இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.
இங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும்.
மற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.  மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன

Guru Bhagavan





நவக்கிரக கோவில்களில் குரு பகவானுக்கு ஏற்ற கோவில் ஆலங்குடி ஆகும். இக்கோவிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும் - ஏலவார்குழலம்மையும் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார்.
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.


ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
 
இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. மேலும் இக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் கலையம்சம் மிக்க சிற்பங்களை காணலாம். இங்கு கோவிலைச் சுற்றி அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் அமைந்துள்ளது.
ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

காயத்ரி மந்திரம்:

விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.