Friday, 21 June 2013

OOTTY Hills




 ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.


உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.
 எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..


Government Botanical Garden,
 Ooty:
1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. 
1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden
2)புதிய பூங்கா - New Garden
3)இத்தாலிய பூங்கா - Italian Garden
4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory
5)தண்ணீர் மாடி - Fountain Terrace
6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries
பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம்.
 இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.

Rose Garden:

நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம்.
 தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.  
Lake Park:
ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா.
 மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.  

No comments:

Post a Comment